மாவட்ட ஆட்சியர் குறித்து செந்தில்பாலாஜி விமர்சித்த விவகாரம் மீதான வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்
கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகனை கடும் வார்த்தைகளால் விமர்சித்ததாக அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கு, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு உள்ளது.
அண்மையில் செய்தியாளர் சந்திப்பின்போது, மாவட்ட ஆட்சியர் குறித்து செந்தில் பாலாஜி, ஆட்சேபகரமான சில கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
தான்தோன்றிமலை காவல் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் கொடுத்த புகாரின் பேரில் செந்தில்பாலாஜி மீது, சட்ட விரோதமாக கூடுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ், கடந்த 16ஆம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கின் விசாரணை, சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு உள்ளது.
Comments