மகாராஷ்டிரத்தில் இறப்பு விகிதம் கடந்த ஒரு மாதத்தில் குறைந்துள்ளதாக தகவல்

0 1424
மகாராஷ்டிரத்தில் இறப்பு விகிதம் கடந்த ஒரு மாதத்தில் குறைந்துள்ளதாக தகவல்

மகாராஷ்டிரத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரில் இறப்பு விகிதம் கடந்த ஒரு மாதத்தில் குறைந்துள்ளது.

மகாராஷ்டிரத்தில் ஏப்ரல் 22ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை ஐயாயிரத்து 649 ஆகவும், இறப்பு விகிதம் 4 புள்ளி ஏழு ஆறு விழுக்காடாகவும் இருந்தது. ஒரு மாதத்துக்குப் பின் மே 21ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 41 ஆயிரத்து 642 ஆகவும், இறப்பு விகிதம் 3 புள்ளி நான்கு ஒன்பது விழுக்காடாகவும் இருந்தது.

உயிரிழந்தோர் எண்ணிக்கை ஏப்ரல் 22 ஆம் தேதி 269ஆக இருந்தது மே 21ஆம் தேதி ஆயிரத்து 454ஆக உயர்ந்துவிட்டது. இருப்பினும் மொத்த கொரோனா நோயாளிகளில் உயிரிழப்பின் விகிதத்தை ஒப்பிடும் போது குறைந்துள்ளது. சனிக்கிழமை நிலவரப்படி உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்து 517ஆகவும், இறப்பு விகிதம் 3 புள்ளி 4 விழுக்காடாகவும் உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments