ஹாங்காங்கில் பிரிவினைவாதத்தை ஒடுக்க தேசிய பாதுகாப்பு சட்டம்கொண்டுவரப்படுவதாக, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு சீனா விளக்கம்
ஹாங்காங்கில் பிரிவினைவாதத்தை ஒடுக்கும் வகையில் அங்கு தேசிய பாதுகாப்பு சட்டம் கொண்டுவரப்படுவதாக, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு சீனா விளக்கம் அளித்துள்ளது.
"ஒரே நாடு, இரு சட்டங்கள்" என்ற அடிப்படையில் ஹாங்காங் பகுதியில் உள்ள சுதந்திர நடைமுறைகளை முடிவுக்கு கொண்டுவரும் வகையில், தேசிய பாதுகாப்புச் சட்டத்தை சீனா இயற்றுவதாக சர்ச்சைகள் உள்ளன. எனவே, சட்டம் கொண்டுவரப்பட்ட பிறகு, விமர்சனங்கள் எழுவதை கட்டுப்படுத்தும் நோக்கில், இந்தியா உள்ளிட்ட நாடுகளின் தூதர்களிடம் சீனா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பை நிலைநிறுத்துவது முற்றிலும் சீனாவின் உள்நாட்டு விவகாரம் என்றும், பிற நாடுகள் இதில் தலையிடக் கூடாது என்ற வகையில் இந்த விளக்கம் அளிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்தியா பிற நாடுகளின் தூதரகளுக்கு அதுகுறித்து விளக்கியது குறிப்பிடத்தக்கது.
Comments