ககன்யான் திட்டத்துக்காக இந்திய விண்வெளி வீரர்கள் மீண்டும் பயிற்சி
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்துக்காக ரஷ்யாவில் 4 இந்திய விண்வெளி வீரர்களும் மீண்டும் பயிற்சியை தொடங்கியுள்ளனர்.
2022ம் ஆண்டில் விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் திட்டத்தை ரஷ்யா உதவியுடன் இந்தியா சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்த முடிவு செய்துள்ளது. இதற்காக 4 விண்வெளி வீரர்கள், பிப்ரவரி மாதம் முதல் மாஸ்கோவில் பயிற்சி பெற்று வந்தநிலையில், கொரோனா பரவலை அடுத்து முன்னெச்சரிக்கையாக அது நிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், அந்த பயிற்சியை மே 12ம் தேதி முதல் காகரின் ஆராய்ச்சி மற்றும் சோதனை விண்வெளி பயிற்சி மையத்தில் (Gagarin Research & Test Cosmonaut Training Center) 4 பேரும் தொடங்கியிருப்பதாக ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான ரோஸ்கோஸ்மோஸ் ((Roscosmos)) தெரிவித்துள்ளது. 4 வீரர்களும் இந்திய தேசிய கொடியுடன் கொண்ட விண்வெளி உடையை அணிந்துள்ள புகைப்படத்தையும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.
Comments