அவதார் 2 ஆம் பாகத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவக்கம்

0 2600
அவதார் 2 ஆம் பாகத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவக்கம்

கொரோனா தாக்கத்தால், தற்காலிகமா நிறுத்தப்பட்டிருந்த அவதார் திரைப்பட 2 ஆம் பாகத்தின் படப்பிடிப்பை, அடுத்த வாரம் நியுசிலாந்தில் தொடங்க உள்ளதாக தயாரிப்பாளர் ஜான் லேன்டோ (Jon Landau) தெரிவித்துள்ளார்.

நியுசிலாந்தில், கொரோனா தொற்றின் தாக்கம், தணியத் தொடங்கியதை தொடர்ந்து, அந்நாட்டு அரசு புதிய கட்டுப்பாடுகளுடன் திரைப்பட படப்பிடிப்பை தொடங்க ஒப்புதல் அளித்துள்ளது. உலகளவில், அதிக வசூலை குவித்த படங்களுள் ஒன்றான அவதார் திரைப்படத்தின் 2 ஆம் பாகத்தை அடுத்த ஆண்டு டிசம்பரில் வெளியிட உள்ளதாக திரைப்பட குழுவினர் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments