மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு
தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் மலையோர மாவட்டங்களிலும் தென்மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், மதுரை, திருச்சி, கரூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருநெல்வேலி ஆகிய 11 மாவட்டங்களில் அதிகப்பட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் எனக் குறிப்பிட்டுள்ளது.
தென்மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அடுத்த 5 நாட்களுக்கு அந்தப் பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது.
West & NW Interior #TamilNadu is likekly to see another day of #Thunderstorms with one or two places to see moderate to intense spell of #Rains later in the evening. A developing Shear Zone could aid Thunderstorms in the days to come with next week looking good for #Rains #COMK pic.twitter.com/NNVplBW14D
— ChennaiRains (Social Distance Now) (@ChennaiRains) May 23, 2020
Comments