ஆகஸ்ட் மாதத்துக்கு முன்பு சர்வதேச விமான போக்குவரத்து தொடங்க முயற்சி - மத்திய விமான போக்குவரத்து துறை
ஆகஸ்ட் மாதத்துக்கு முன்பு சர்வதேச விமான போக்குவரத்து சேவையை தொடங்க முயற்சி எடுக்கப்படும் என்று மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கால் உள்நாட்டு விமான போக்குவரத்து, சர்வதேச விமான போக்குவரத்து ஆகியவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதில் உள்நாட்டு விமான போக்குவரத்து 25ம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
எனினும் சர்வதேச விமான போக்குவரத்து எப்போது தொடங்கப்படும் என தெரியாமல் உள்ளது. இந்நிலையில், பேஸ்புக் நேரலையில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஹர்தீப் சிங் புரி, ஆகஸ்ட் மாதத்துக்கு முன்பு சர்வதேச விமான போக்குவரத்தை தொடங்க முயற்சி மேற்கொள்ளப்படும் என குறிப்பிட்டார்.
Comments