வன்கொடுமை தடை சட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி தயாநிதிமாறன் மனு
கோவை காவல்துறையினரால் வன்கொடுமை தடைச் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி திமுக எம்.பி.க்கள் தயாநிதிமாறன், டி.ஆர்.பாலு ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
திமுகவின் " ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் " பெறப்பட்ட மனுக்களை தலைமைச் செயலாளரை அண்மையில் சந்தித்து வழங்கியபிறகு இருவரும் பேட்டியளித்தனர். அப்போது பேசிய தயாநிதிமாறன், தங்களை தலைமைச் செயலாளர் மூன்றாம் தர மக்கள் போல் நடத்தினார் எனவும், தாங்கள் என்ன தாழ்த்தப்பட்ட ஆட்களா எனவும் கூறியிருந்தனர்.
இதை சுட்டிக்காட்டி, தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்தி பேசியிருப்பதாக கூறி, கோவையை சேர்ந்த சேகர் என்பவர் அளித்த புகாரின்பேரில் வெரைட்டி ஹால்காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை ரத்து செய்யக் கோரியும், மேல் விசாரணைக்கு தடை கோரியும், டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் தாக்கல் செய்த மனுவில் யாரையும் புண்படுத்தும் நோக்கில் அந்த கருத்தை தெரிவிக்கவில்லை எனக் கூறியுள்ளனர். இந்த மனு இன்று பிற்பகலில் அவசர வழக்காக விசாரிக்கப்படவுள்ளது.
Comments