வெளிமாநிலங்களில் இருந்து ரயிலில் வருவோருக்கு 14 நாள் வீட்டுத் தனிமை
வெளி மாநிலங்களில் இருந்து மும்பைக்கு ரயிலில் வரும் அனைவரையும் 14 நாட்கள் வீட்டுத் தனிமையில் வைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
நாட்டின் பெரிய நகரங்களிடையே 200 சிறப்பு ரயில்களின் போக்குவரத்து ஜூன் ஒன்றாம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்நிலையில் வெளிமாநிலங்களில் இருந்து மும்பைக்கு ரயிலில் வருவோரைச் சோதித்தல், தனிமையில் வைத்தல் ஆகியவற்றுக்கான நடைமுறைகளை மாநகராட்சி தயாரித்துள்ளது.
இது குறித்து ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது. அதன்படி வெளிமாநிலங்களில் இருந்து ரயிலில் வருவோருக்குக் கொரோனா அறிகுறி இல்லாவிட்டாலும் அவர்களை 14 நாட்கள் வீட்டுத் தனிமையில் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் அறிகுறிகள் தென்படும் பயணிகளைத் தனிமை முகாம்களில் வைத்துக் கண்காணிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
Comments