ரூ. 25க்கு திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு விற்பனை

0 80561
ரூ. 25க்கு திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு விற்பனை

சென்னை, ஐதராபாத், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் உள்ள தேவஸ்தான தகவல் மையங்களிலும் ஆந்திராவில் உள்ள தேவஸ்தான திருமண மண்டபங்களிலும் 25 ரூபாய்க்கு திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு முடிவுக்கு வந்து, பக்தர்கள் கோயிலுக்கு அனுமதிக்கும் வரை 50 ரூபாய் மதிப்புள்ள ஏழுமலையான் லட்டு பிரசாதம் சலுகை விலையில் 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது. மேலும் விவரங்களுக்கு தேவஸ்தான கால் சென்டர் எண் 18004254141 அல்லது 1800425333333 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.1000 க்கும் மேற்பட்ட லட்டுகளை பெற விரும்பும் பக்தர்கள் தங்கள் பெயர், முழு முகவரி மற்றும் மொபைல் எண் விவரங்களை tmlbulkladdus@gmail.com க்கு 5 நாட்களுக்கு முன்பே அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments