காவல்துறையில் அவசர எண்கள் செயல்படத்தொடங்கியுள்ளன

0 1159
காவல்துறையில் ’’100 & 112 ’’ எண்கள் செயல்படத்தொடங்கியுள்ளன

பிஎஸ்என்எல் தொலை தொடர்பு சேவையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் சரிவர இயங்காமல் இருந்த, காவல் அவசர உதவி எண்கள் கோளாறு சரிசெய்யப்பட்டதை மீண்டும் செயல்பட துவங்கியுள்ளன.

பிஎஸ்என்எல் சேவையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால், ஏர்டெல், வோடபோன், ஐடியா, ஜியோ போன்ற பிற நிறுவன வாடிக்கையாளர்கள், காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளும் 100, 112 அவசர உதவி எண்களை அழைக்க முடியாத நிலை ஏற்பட்டது.

அதற்கு மாற்றாக வேறு உதவி எண்களையும் காவல்துறை அறிவித்தது. இந்நிலையில் பிஎஸ்என்எல் சேவையில் ஏற்பட்ட கோளாறு சரிசெய்யப்பட்டதால், அவசர உதவி எண்கள் மீண்டும் இயங்குவதாகவும், பொதுமக்கள் 100, 112 எண்களிலேயே அவசர உதவிக்கு அழைக்கலாம் என்றும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments