கொரோனா தடுப்பில் ஹைட்ராக்சி குளோரோகுயின் பயன்பாட்டை விரிவுபடுத்தும் மத்திய அரசு

0 1255
கொரோனா தடுப்பில் ஹைட்ராக்சி குளோரோகுயின் பயன்பாட்டை விரிவுபடுத்தும் மத்திய அரசு

கொரோனா தடுப்பில், மலேரியா எதிர்ப்பு மருந்தான ஹைட்ராக்சி குளோரோகுயின் பயன்பாட்டை, மத்திய அரசு விரிவுபடுத்தியுள்ளது.

கொரோனா நோயாளிகளுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயினை கொடுப்பதால் பயன் ஏதும் இல்லை என லான்சட் மருத்துவ ஆய்விதழில் வெளியான கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா தொற்றுவதைத் தடுக்கும் நோக்கில், அந்த மருந்தை மேலும் பல பிரிவினருக்கு கொடுப்பதற்கான அறிவுறுத்தல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சை பணிகளில் உள்ள அனைத்து சுகாதாரப் பணியாளர்கள், அத்தகைய பகுதிகளில் உள்ள பிற சுகாதாரத்துறை பணியாளர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள், ஆய்வகத்தில் கொரோனா உறுதிப்படுத்தப்பட்டவர்களோடு தொடர்பில் இருந்த குடும்பத்தினருக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை முன்தடுப்பு மருந்தாக வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. லான்சட் மருத்துவ ஆய்விதழ் கட்டுரை, சிகிச்சை மருந்து என்ற வகையில் ஹைட்ராக்சிகுளோரோகுயின் பற்றி குறிப்பிடுவதாகவும், முன்தடுப்பு மருந்தாக அல்ல என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments