ஆரோக்கியமான முதியோர்கள் விமான பயணம் மேற்கொள்ளலாம்: மத்திய அரசு

0 2342
ஆரோக்கியமான முதியோர்கள் விமான பயணம் மேற்கொள்ளலாம்: மத்திய அரசு

ஆரோக்கியமான முதியோர்கள் விமான பயணம் மேற்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

வரும் 25ம் தேதி முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்கப்படவுள்ள நிலையில், அதுகுறித்த பல்வேறு நடைமுறைகளை விமான நிலையங்கள் ஆணையம் அண்மையில் வெளியிட்டது. அதில் ஆரோக்ய சேது செயலி கட்டாயம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, ஆரோக்கியமான முதியோர்கள் விமான பயணம் மேற்கொள்ளும்போது தடுத்து நிறுத்தப்பட மாட்டார்கள் எனவும், ஆரோக்ய சேது செயலி விரும்பினால் பதிவிறக்கம் செய்யலாம், கட்டாயமில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். உள்நாட்டு விமான போக்குவரத்துக்கு தமிழகமும், மகாராஷ்டிராவும் எதிர்ப்பு தெரிவித்திருப்பது குறித்த கேள்விக்கு, அது சரியான நடவடிக்கை இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments