மேற்கு வங்கத்துக்கு வரும் 26ஆம் தேதி வரை சிறப்பு ரயில்களை இயக்க வேண்டாம் என ரயில்வே வாரியத்துக்கு மேற்கு வங்க அரசு கடிதம்
மேற்கு வங்கத்துக்கு வரும் 26ஆம் தேதி வரை சிறப்பு ரயில்களை இயக்க வேண்டாம் என ரயில்வே வாரியத்திடம் மாநில அரசு வலியுறுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தின் கடலோர மாவட்டங்களில் அம்பன் புயலால் பேரழிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ரயில்வே வாரியத் தலைவருக்கு மாநிலத் தலைமைச் செயலாளர் எழுதியுள்ள கடிதத்தில், புயல் பாதித்த பகுதிகளில் சீரமைப்பு மற்றும் மறுவாழ்வுப் பணிகளில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் சிறப்பு ரயில்களில் வரும் பயணிகளைச் சோதித்தல், தனிமைப்படுத்தல் ஆகியவற்றை அடுத்த சில நாட்களுக்குச் செய்ய இயலாது எனக் குறிப்பிட்டுள்ளார். வரும் 26ஆம் தேதி வரை மேற்குவங்கத்துக்குச் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். மேற்குவங்கம் சிறப்பு ரயில்களை அனுமதிக்கவில்லை என மத்திய அரசு குற்றஞ்சாட்டியதும், சிறப்பு ரயில்களை இயக்குவது குறித்து ரயில்வே துறையே முடிவெடுக்கும் என்று அறிவித்ததும் குறிப்பிடத் தக்கது.
Comments