இந்தியாவில் 50,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் அமேசான் நிறுவனம்
இணையத்தளத்தில் பொருட்களை விற்கும் அமேசான் நிறுவனம் இந்தியாவில் ஐம்பதாயிரம் தற்காலிக வேலைவாய்ப்புகளை உருவாக்க உள்ளது.
பொருட்களைக் கிடங்குகளில் இருந்து சேகரிப்பது, பாக்கெட்டில் அடைப்பது, வாகனத்தில் கொண்டுசெல்வது, வீடுதேடிச் சென்று வழங்குவது ஆகியவற்றில் ஐம்பதாயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளன. இணையத்தளத்தில் பொருட்களை வாங்குவது அதிகரித்துள்ளதால் அந்தத் தேவையைச் சமாளிக்கத் தற்காலிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாகத் தெரிவித்துள்ளது.
ஒப்பந்தப் பணி, பகுதிநேரப் பணி ஆகியனவும் இதில் அடங்கும் எனத் தெரிவித்துள்ளது. பாதுகாப்பாகப் பொருட்களை வழங்குவதற்காக முகக்கவசம் அணிதல், வெப்பநிலை கண்டறிதல் உட்பட வழக்கமான செயல்பாட்டு நடைமுறைகளில் நிறைய மாற்றங்கள் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. வீடு தேடிச் சென்று உணவு வழங்கும் தொழிலிலும் அமேசான் நிறுவனம் அண்மையில் இறங்கியுள்ளது. ஆண்டுதோறும் ஜூலையில் நடத்தும் அமேசான் பிரைம்டே விற்பனையை இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குத் தள்ளி வைத்துள்ளது.
Comments