தமிழகத்தின் பல இடங்களில் 60 நாட்களுக்குப் பின் ஆட்டோக்கள் இயக்கம்
ஊரடங்கு விதிகள் தளர்வின் ஒரு பகுதியாக சென்னை நீங்கலாக தமிழகத்தில் இன்று முதல் ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
கொரோனா பாதிப்பு குறைந்த இடங்களில் ஒரே ஒரு பயணியை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளுடன் ஆட்டோக்களை இயக்க தமிழக அரசு அனுமதித்துள்ளது. இதையடுத்து சேலம், தூத்துக்குடி, நெல்லை, மதுரை, கோவை உட்பட பல்வேறு இடங்களில் 60 நாட்களுக்குப் பின் ஆட்டோக்கள் இயக்கப்பட்டன.
முகக் கவசம் அணிந்து ஓட்டுநர்கள் ஆட்டோக்களை இயக்கினர். சில இடங்களில் பயணிகள் சானிடைசரால் கைக்ளை சுத்தம் செய்த பின்னரே அனுமதிக்கப்பட்டனர். பயணம் முடிந்த பிறகு ஆட்டோக்கள் சோப்பு நீரால் கழுவப்பட்டன. ஒருவரை மட்டும் அனுமதிப்பது நடைமுறை சாத்தியமற்றது என்று தெரிவித்த ஆட்டோ ஓட்டுநர்கள் கணவன், மனைவியை தனித்தனி ஆட்டோக்களில் ஏற்ற முடியாது என்று தெரிவித்தனர்.
மேலும் ஒரு நபர் மட்டுமே அனுமதி என்பதால் அதிக கட்டண வாய்ப்புகளை கருதி பயணிகள் ஆட்டோக்களில் ஏறத் தயங்குவதாக அவர்கள் கூறினர். 3 பேர் வரை அனுமதிக்குமாறு அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Rameswaram: Tamil Nadu govt has allowed plying of autos and cycle rickshaws from today amid #COVID19 lockdown, except in Chennai&containment zones. Ramesh, an auto driver says, "There are no tourists due to lockdown. Local passengers are also not there, hence no earning for us". pic.twitter.com/rPTN6A2d7l
— ANI (@ANI) May 23, 2020
Comments