சென்னையில் 15 மண்டலங்களிலும் 9,364 பேருக்கு கொரோனா

0 1086
சென்னையில் 15 மண்டலங்களிலும் 9,364 பேருக்கு கொரோனா

சென்னையில் தேனாம்பேட்டை மண்டலத்திலும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை ஆயிரமாக அதிகரித்துள்ளது.

15 மண்டலங்களிலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9 ஆயிரத்து 364ஆக உயர்ந்துள்ள நிலையில், ராயபுரம் மண்டலத்தில் பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்து 768ஆகவும், கோடம்பாக்கம் மண்டலத்தில் ஆயிரத்து 300ஆகவும், திரு.வி.க. நகர் மண்டலத்தில் ஆயிரத்து 79ஆகவும் அதிகரித்துள்ளது.

இதையடுத்து 4ஆவது மண்டலமாக தேனாம்பேட்டை மண்டலத்திலும் கொரோனா பாதிப்பு ஆயிரமாக உயர்ந்துள்ளது. மருத்துவ சிகிச்சையில் 3 ஆயிரத்து 791 பேர் குணமான நிலையில், 5 ஆயிரத்து 461 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். இதுதவிர்த்து 15 மண்டலங்களிலும் இதுவரை 66 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதித்தோரில் 60 புள்ளி 28 சதவீதம் பேர் ஆண்கள் ஆவர். 39 புள்ளி 70 சதவீதம் பேர் பெண்கள் ஆவார்கள்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments