சொந்த ஊர் திரும்புவதற்காக அரசுப் பேருந்தை திருடிய இளைஞன்
ஆந்திர மாநிலத்தில் ஊரடங்கு காரணமாக உறவினர் வீட்டில் சிக்கிக் கொண்ட நபர், சொந்த ஊர் திரும்ப அரசு பேருந்தை திருடிச் சென்ற நிகழ்வு அரங்கேறி உள்ளது.
பெங்களூரு அருகே விஜயாபுரத்தைச் சேர்ந்த முஜாமி கான், ஆந்திர மாநிலம் அனந்தப்பூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு கடந்த மார்ச் மாதம் வந்ததாகவும், ஊரடங்கால் சொந்த ஊர் திரும்பமுடியாமல் சிக்கிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நடந்தே சொந்த ஊர் திரும்ப முயன்ற முஜாமி கான், தர்மவரம் என்ற இடத்தில் கால் வலி எடுத்ததால் மது வாங்கி குடித்தவிட்டு பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்த அரசுப்பேருந்தை திருடிச் சென்றுள்ளான்.
இதை கண்டுஅதிகாரிகள் அளித்த புகாரின்பேரில் கியா தொழிற்சாலை அருகே முஜாமிகானை போலீசார் மடக்கி பிடித்தனர். அரசு பேருந்தில் சென்றால் போலீஸ் மறிக்கமாட்டார்கள் என்றெண்ணி திருடியதாக விசாரணையில் முஜாமி விளக்கம் அளித்துள்ளான்.
Comments