சீனாவின் 3 வங்கிகளுக்கு ஐயாயிரத்து 318 கோடி ரூபாய் வழங்க அனில் அம்பானிக்கு பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவு
சீனாவின் 3 வங்கிகளுக்கு ஐயாயிரத்து 318 கோடி ரூபாய் வழங்க அனில் அம்பானிக்கு பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2012ஆம் ஆண்டு ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவனத்துக்கு 3 சீன வங்கிகளில் கடன் வாங்க அதன் தலைவர் அனில் அம்பானி சொந்த உத்தரவாதம் அளித்ததாகக் கூறப்படுகிறது. இந்தக் கடனைத் திருப்பிச் செலுத்தாததால் சீன வங்கிகள் கடன் தொகையை அனில் அம்பானியிடம் இருந்து பெற்றுத் தரக்கோரி பிரிட்டன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தன.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நிகல் டியர், ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் பெற்ற கடனுக்காக அனில் அம்பானி ஐயாயிரத்து 318 கோடி ரூபாயைச் சீன வங்கிகளுக்கு 21 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. திவால் அடைந்ததாக அறிவிக்கக் கோரிக் கடந்த ஆண்டே விண்ணப்பித்துள்ளதால் இந்தத் தீர்ப்பு தங்களைப் பாதிக்காது என ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் தெரிவித்துள்ளது. அதேபோல் கடனுக்காக அனில் அம்பானி எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
Comments