கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களில் இருந்து வருவோருக்குத் தனிமை - கர்நாடக டிஜிபி அறிவிப்பு
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களில் இருந்து விமானத்தில் வரும் பயணிகள் 7 நாள் தனிமை முகாமிலும், அதன்பின் வீட்டுத் தனிமையிலும் வைக்கப்படுவர் எனக் கர்நாடக டிஜிபி தெரிவித்துள்ளார்.
கர்நாடக அரசு மாநிலத்துக்குள் பேருந்துப் போக்குவரத்தையும் ரயில் போக்குவரத்தையும் தொடங்கியுள்ளது. மகாராஷ்டிரம், குஜராத், கேரளம், தமிழகம் ஆகிய மாநிலங்களில் இருந்து வருவோரைக் கர்நாடகத்துக்குள் அனுமதிப்பதில்லை என்றும் ஏற்கெனவே அறிவித்துள்ளது.
திங்கட்கிழமை முதல் உள்நாட்டு விமானப் போக்குவரத்து தொடங்க உள்ளதாக விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்நிலையில், மகாராஷ்டிரம், ராஜஸ்தான், டெல்லி, குஜராத், தமிழ்நாடு, மத்தியப் பிரதேச மாநிலங்களில் இருந்து விமானத்தில் வருவோர் 7 நாட்கள் தனிமை முகாம்களிலும், அதன்பின் வீட்டுத் தனிமையிலும் வைக்கப்படுவர் எனக் கர்நாடக டிஜிபி பிரவீன் சூட் அறிவித்துள்ளார்.
Incoming domestic flight passenger from Maharashtra, Rajasthan, Delhi, Gujarat, Tamil Nadu, Delhi & Madhya Pradesh will undergo 7 day institutional Quarantine followed by home quarantine.
— DGP KARNATAKA (@DgpKarnataka) May 23, 2020
Comments