லடாக் எல்லையில் சீனாவுடன் மோதல் போக்கு நிலவும் நிலையில் லே பகுதிக்குள் இந்திய ராணுவ தளபதி திடீர் பயணம்

0 4572
லடாக் எல்லையில் சீனாவுடன் மோதல் போக்கு நிலவும் நிலையில் லே பகுதிக்குள் இந்திய ராணுவ தளபதி திடீர் பயணம்

லடாக் எல்லையில் சீனா, இந்தியா வீரர்கள் இடையே மோதல் போக்கு நிலவும் நிலையில் லே பகுதியில் இந்திய படைப்பிரிவு தலைமையகத்துக்கு இந்திய ராணுவ தளபதி மனோஜ் முகுந்த நராவானே ((Manoj Mukund Naravane)) திடீர் பயணம் மேற்கொண்டார்.

சிக்கிம் எல்லையிலும், லடாக் எல்லையிலும் கடந்த சில நாள்களாக இந்தியா, சீனா ராணுவ வீரர்களிடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. லடாக்கில் முகாமிட்டுள்ள இந்திய ராணுவத்தின் 14ஆவது படைப்பிரிவு தலைமையகம் லே பகுதியில் உள்ளது. அங்கு ராணுவ தளபதி நராவானே நேற்று திடீர் பயணமாக சென்றார். பின்னர் அங்குள்ள அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தி விட்டு, சில மணி நேரத்தில் டெல்லிக்கு அவர் திரும்பினார். சீனாவுடன் எல்லையில் நிலவும் மோதல் போக்கு குறித்து ஆலோசிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments