ஓவியங்களை வரைந்து பொதுமுடக்கத்தை கழித்த தெருக்கலைஞர்
ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்-டில் தெருக்கலைஞர் ஒருவர் பொதுமுடக்கத்தின் போது தன் வீட்டு ஜன்னல்களில் பல்வேறு ஓவியங்கள் வரைந்து உற்சாகமாக பொழுதை கழித்துள்ளார்.
அந்த கலைஞரின் பெயர் சில்வெஸ்ட்ரே சான்டியாகோ என்பதாகும்.அவரது ஓவியங்கள் ஈர்க்கப்பட்ட மழை பெய்யும் ஆண்கள் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்டவை.
மேலும் வீட்டின் ஜன்னல்களில் ஒட்டப்பட்ட பல்வேறு வகையான கட்-அவுட்களை காணும் போது பார்வையாளர்கள் தங்களின் கற்பனைத் திறனை அதில் செலுத்தி ரசிக்க முடியும். இந்த ஓவியங்களில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொப்பி அணிவதற்கு பதிலாக முகமூடி அணிந்து மழை பெய்யும் வகையில் ஆண்களை அவர் வரைந்துள்ளார்.
Comments