அமெரிக்காவின் 11 அதிபர்களிடம் பணியாற்றிய வெள்ளை மாளிகை முன்னாள் ஊழியர் கொரோனாவால் உயிரிழப்பு
அமெரிக்காவின் 11 அதிபர்களிடம் பணிபுரிந்த வெள்ளை மாளிகை முன்னாள் ஊழியர் கொரோனாவால் உயிரிழந்ததாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
91 வயதான வில்சன் ரூஸ்வெல்ட் ஜெர்மன் (Wilson Roosevelt Jerman) 1957 முதல் 2012 வரை நீண்ட காலம் பணியாற்றிய வெள்ளை மாளிகை ஊழியர் ஆவார்.
ஐசனோவரின் காலத்தில் வெள்ளை மாளிகை பணியில் கிளீனராக சேர்ந்த அவர், அதிபர் ஜான் எஃப் கென்னடியின் காலத்தில் அவரது மனைவி ஜாக்குலின் அன்பை பெற்று பட்லராக பதவி உயர்வு பெற்றார். 1997 ல் ஓய்வு பெற்றாலும், அதிபர் ஜார்ஜ் புஷ் மற்றும் லாரா புஷ்-ன் அழைப்பை ஏற்று 2003 ல் மீண்டும் பணியில் சேர்ந்தார்.
தினமும் காலை தாங்கள் பார்க்கும் முதல் மனிதரும் இரவில் காணும் கடைசி மனிதரும் அவரே என்ற புஷ் தம்பதிகளின் பாராட்டை பெற்றவர் மறைந்து விட்டார்.
Wilson Roosevelt Jerman, a former White House butler who worked under 11 US Presidents, has died after contracting coronavirus, his granddaughter confirms. He was 91 years old. https://t.co/JZximJSTuq
— CNN (@CNN) May 22, 2020
Comments