கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் உலக நாடுகள் தங்கள் நட்புகளை பலப்படுத்தி ஒன்றுபட்டு போராட வேண்டும்-அமைச்சர் ஹர்ஷ் வரதன்
கோவிட் 19 நோய்க்கு எதிரான போராட்டத்தில் உலக நாடுகள் தங்கள் நட்புகளை பலப்படுத்தி ஒன்றுபட்டு போராட வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஹர்ஷ் வரதன் வலியுறுத்தியுள்ளார்.
உலக சுகாதார அமைப்பின் செயற்குழு தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டு, காணொலி வாயிலாக உரையாற்றிய அவர், நமது மருத்துவ சாதனங்களின் தயார்நிலையை அதிகப்படுத்த வேண்டும் என்று வலியறுத்தினார்.
இந்தியா மிகவும் தீவிரமாக கொரோனாவுக்கு எதிராகப் போராடி வருவதாக குறிப்பிட்ட ஹர்ஷ் வரதன், இந்தியாவில் குணமடைந்தோர் கிட்டதட்ட 41 சதவீதமாக இருப்பதாகவும் உயிரிழப்பு 3 சதவீதமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
I feel privileged to take charge as Chairman of the World Health Organisation's Executive Board at its 147th session held virtually.I believe that health is central to economic performance and to enhancing human capabilities.@WHO @PMOIndia @MEAIndia @MoHFW_INDIA #EB147 #COVID19 pic.twitter.com/pBn7LrE4Yh
— Dr Harsh Vardhan (@drharshvardhan) May 22, 2020
Comments