பச்சைக் கருவுடன் கோழி முட்டை : கேரளாவில் ஓர் அதிசயம்
கேரளாவில் பச்சை கருவுடன் கூடிய முட்டையிடும் கோழிகள் குறித்து அம் மாநில விஞ்ஞா னிகள் ஆய்வு பணியை தொடங்கி உள்ளனர்.
மலப்புரம் - ஒத்துக்குங்கல் என்ற நகரில் ஷிஹாபுதீன் என்பவரின் சிறிய கோழிப்பண்ணையில், 6 கோழிகள் மட்டும் பச்சை கருவுடன் கூடிய முட்டைகளிட்டு வருகின்றன. பச்சைக் கரு முட்டையில் இருந்து பொறித்த கோழி குஞ்சுகளும் வளர்ந்து, பச்சை கரு முட்டைகள் இட்டு வருகின்றன. இதுகுறித்து, சமூக வலைதளங்களில் இவர் பதிவிட்ட புகைப்படங்கள், தற்போது வைரலாகி வருகின்றன .
குஞ்சு பொறிப்பதற்காக பச்சைக்கரு முட்டைகளை பயன்படுத்தி வருவதாக கூறும் ஷிஹா புதீன் குடும்பத்தினர், தாங்கள் இந்த முட்டைகளை சாப்பிட்டு பார்த்ததாகவும் தெரிவித்தனர். இந்த அதிசய நிகழ்வு குறித்து தகவல் அறிந்த கேரள கால்நடை மற்றும் விலங்கு அறி வியல் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகளின் ஆய்வு முடிவுக்குப்பின்னரே, பொதுமக்களுக்கு பச்சைக்கரு முட்டை விற்பனை க்கு கிடைக்கும்.
Comments