உலுக்கும் கொரோனா உயரும் பாதிப்புகளால் மிரளும் சென்னை

0 3021
சென்னையில் ஒரே நாளில் மட்டும் 569 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி, கொரோனா பாதிப்பு 9 ஆயிரத்து 300 ஐ தாண்டி உள்ளது. கொரோனாவால் சென்னையில் 67 பேர் உயிரி ழக்க, 3 ஆயிரத்து 773 பேர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர்.

சென்னையில் ஒரே நாளில் மட்டும் 569 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி,  கொரோனா பாதிப்பு 9 ஆயிரத்து 300 ஐ தாண்டி உள்ளது. கொரோனாவால் சென்னையில் 67 பேர் உயிரி ழக்க, 3 ஆயிரத்து 773 பேர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர்.

தமிழகத்தில் அதிக பாதிப்பை சந்தித்து வரும் சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 569 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது. இதனால் சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 300 - ஐ தாண்டி விட்டது.

செங்கல்பட்டில் ஒரே நாளில் 40 பேர் பாதிக்கப்பட, திருவள்ளூரில் 39 பேருக்கும், காஞ்சியில் 13 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது.

இதுதவிர, ராமநாதபுரத்தில் 7 பேரும், தூத்துக்குடியில் 6 பேரும் பாதிக்கப்பட, தேனி மற்றும் திருச்சியில் தலா 4 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனது. புதுக்கோட்டை , திருவண்ணாமலை மற்றும் வேலூரில் தலா 2 பேர், பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, மதுரை, ராணிப்பேட்டை, நெல்லை ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் வீதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ஈரோட்டில் கடந்த 36 நாட்களுக்கு பிறகு , ஒருவருக்கு, வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது.

2 வாரத்திற்கும் மேலாக கொரோனா பாதிப்பு இல்லாமல் இருந்த திருவாரூரில், கடந்த 24 மணி நேரத்தில் வெளி மாநிலத்தில் இருந்து திரும்பிய 3 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

தமிழகத்தை பொறுத்தவரை, மொத்தம் உள்ள 37 மாவட்டங்களில், 17 மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் கூட, வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட வில்லை .

சென்னையில் மட்டும் 5 ஆயிரத்து 523 பேர், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வர, இதுவரை, 3 ஆயிரத்து 773 பேர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர்.

கொரோனாவுக்கு இரை ஆன 98 பேரில், சென்னையில் மட்டும் 67 பேர் உயிரிழந்துள்ளனர். திருவள்ளூரில் 8 பேரும், செங்கல் பட்டில் 6 பேரும் கொரோனாவுக்கு பலி ஆகி உள்ளனர்.

தமிழகத்தில் உச்சம் தொட்ட கொரோனாவால், சென்னையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக் கையும், உயிர்ப்பலியும் ஒவ்வொரு நாளும் உயர்ந்து வருகிறது. மிரட்டும் கொரோனாவை
ஒடுக்கும் பணியில் தமிழக சுகாதாரத்துறை போர்க்கால அடிப்படையில் பணிகளை முடுக்கி விட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments