கொரோனா தடுப்பூசி நடைமுறைக்கு வர மேலும் ஒரு வருடம் வரை ஆகக்கூடும்
150 க்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பூசி சோதனைகள் நடந்தாலும், அது நடைமுறைக்கு வர குறைந்தது ஒரு வருடத்திற்கும் அதிகமாக ஆகலாம் என கூறப்படுவதால், பல நாடுகள் பல்வேறு மருந்துக் கூட்டுகளை பயன்படுத்துவது பற்றிய ஆய்வை நடத்த துவங்கி உள்ளன.
அமெரிக்காவில் மலேரியா எதிர்ப்பு மருந்தான ஹைட்ராக்சிகுளோரோகுயின் மற்றம் ஆன்டிபயாடிக்கான அசித்ரோமைசினை கொரோனா நோயாளிகளுக்கு வழங்கலாம் என அங்குள்ள மருந்து கட்டுப்பாட்டுத் துறை அனுமதித்துள்ளது.
ஆன்டிவைரல் மருந்தான ரெம்டெசிவர்,, வலி நிவாரணியான பாரிசிடினிப் (Baricitinib ) இரண்டையும் கலந்து சுமார் 1000 பேரிடம் சோதித்துப் பார்க்கவும் அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
சீனாவும் ஆன்டிவைரல் மருந்தான ஃபாவிலாவிரை (Favilavir )பரிந்துரைத்துள்ளது. இதன் பக்க விளைவுகள் குறைவு எனவும் கூறப்படுகிறது.
மின்னசொட்டா பல்கலைக்கழகத்தில் ரத்தக்கொதிப்பு மருந்தான லோசர்ட்டானும் (Losartan ) பிரான்சில் மூட்டுவலி மருந்தான டோசிலிஸுமாப் (tocilizumab) ம் சோதிக்கப்பட்டு வருகின்றன.
Comments