20000 பேரை வேலைநீக்கம் செய்ய நிசான் கார் நிறுவனம் முடிவு
கொரோனாவால் ஏற்பட்டுள்ள வர்த்தக இழப்பை அடுத்து, சுமார் 20000 பணியாளர்களை வேலைநீக்கம் செய்ய, நிசான் கார் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஜப்பானை தலைமையகமாக கொண்டு செயல்படும் நிசான் நிறுவனம் கடந்த 3 ஆண்டுகளாகவே கடும் வர்த்தக வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இதனால் 12500 பேரை ஆட்குறைப்பு செய்ய உள்ளதாக இந்த நிறுவனம் கடந்த ஜூலையில் அறிவித்தது.
இப்போது கொரோனாவின் பாதிப்பால் வணிகம் அடியோடு நின்று 20 ஆயிரம் பேர் அளவுக்கு ஆட்குறைப்பு நடவடிக்கைகளை எடுக்க உள்ளது.
Comments