பேஸ்புக் ஊழியர்கள் சில ஆண்டுக்கு வீட்டில் இருந்தே பணியாற்றக் கூடும் - மார்க்
பேஸ்புக் ஊழியர்களில் பாதி பேர் அடுத்த சில ஆண்டுகளுக்கு வீட்டில் இருந்தே பணியாற்றக் கூடும் என்று அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
அலுவலகப் பணிக்கான கலாச்சாரத்தில் கொரோனா அச்சுறுத்தல் பல்வேறு மாறுதல்களை கொண்டு வந்துள்ளது.
உலகின் மிகப்பெரிய சமூக வலைதளமான பேஸ்புக் நிறுவனத்தின் ஊழியர்கள் 2 மாதங்களுக்கு மேலாக அலுவலகத்துக்கு வராமல் ஆன்லைன் மூலம் பணிபுரிகின்றனர்.
கடந்தகால செயல்பாடுகளை அடிப்படையாக கொண்டு கொரோனா பாதிப்பு சீரடைந்த பிறகும், அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளுக்கு இதே நிலை தொடர வாய்ப்புள்ளதாக பேஸ்புக் நிறுவன சிஇஓ மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
Comments