நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் 'ஆர்சனிக் ஆல்பம் 30' என்ற ஹோமியோபதி மருந்து கொரோனாவுக்கு எதிராக கேடயம் போன்றது -அமைச்சர் ஜெயக்குமார்

0 3027
நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் வல்லமை பெற்ற 'ஆர்சனிக் ஆல்பம் 30' என்ற ஹோமியோபதி மருந்து, கொரோனாவுக்கு எதிரான கேடயம் போன்றது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் வல்லமை பெற்ற 'ஆர்சனிக் ஆல்பம் 30' என்ற ஹோமியோபதி மருந்து, கொரோனாவுக்கு எதிரான கேடயம் போன்றது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயபுரத்தில், ஓமியோபதி மாத்திரைகளை பொதுமக்களுக்கு அமைச்சர் ஜெயகுமார் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனா தொற்றை முழுமையாக ஒழிக்க மனித குலம் தடுப்பு மருந்தை நிச்சயம் கண்டுபிடிக்கும் என்றார்.

திமுகவில் இருந்து வி.பி.துரைசாமி நீக்கப்பட்டது குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஜெயக்குமார், பட்டியலினத்தவருக்கு திமுக முக்கியம் தருவதில்லை என்றும். அதனால் இன்னும் நிறைய பேர் அக்கட்சியில் இருந்து வெளியேறுவார்கள் என்றும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments