ZOOM செயலிக்கு தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு
ஜூம் செயலிக்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட பொதுநல மனு குறித்து மத்திய அரசின் பதிலை உச்சநீதிமன்றம் கோரியுள்ளது.
கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் நேரில் சந்திக்க முடியாமல் இருக்கும் மக்கள், ஜூம் வீடியோ செயலி மூலம் குழுவாக அதிக அளவில் உரையாடி வருகின்றனர். இதனால் அண்மைகாலமாக ஜூம் செயலியின் பயன்பாடு இந்திய மக்களிடையே அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் ஜூம் செயலி, தனிநபர் ரகசியம் காத்தலுக்கு எதிராக இருப்பதாகவும்,இதுகுறித்து உரிய சட்டத்தை அரசு வகுக்கும் வகையில் அந்த செயலிக்கு தடை விதிக்க வேண்டுமெனவும் உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தொடரப்பட்டிருந்தது. அதன் மீது இன்று விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், பொதுநல மனு குறித்து மத்திய அரசின் பதிலை கோரி விசாரணையை ஒத்திவைத்தது.
Comments