திமுகவில் பதவி பறிக்கப்பட்ட வி.பி.துரைசாமி பாஜகவில் இணைந்தார்
திமுகவில் துணைப் பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்பட்டதை அடுத்து, வி.பி.துரைசாமி இன்று பாஜகவில் இணைந்தார்.
'முரசொலி' அலுவலக நிலம் தொடர்பாக, தேசிய எஸ்.சி., - எஸ்.டி., ஆணையத்தின் துணை தலைவராக இருந்த முருகன், ஆணையத்தில், மு.க.ஸ்டாலின் ஆஜராக வேண்டும் என, உத்தரவிட்டிருந்தார்.
இதனால், முருகன் மீது, தி.மு.க.,வினர் கடும் அதிருப்தியில் இருந்தனர். இந்நிலையில் தமிழக பா.ஜ., தலைவராக, முருகன் நியமிக்கப்பட்டார். அவரை தி.மு.க., துணை பொதுச் செயலாளர் வி.பி.துரைசாமி அண்மையில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இதனால், துரைசாமி பா.ஜ.க.வில், சேரப்போவதாக தகவல் வெளியானது.
அதேசமயம், திமுகவின் துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து வி.பி. துரைசாமியை, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் நீக்கினார். இந்நிலையில், சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகம் சென்ற வி.பி. துரைசாமி, தமிழக பாஜக தலைவர் முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
Comments