உடல்நலம் பாதித்த தந்தையை சைக்கிளில் அமர வைத்து 1,200 கி.மீ ஓட்டிச் சென்ற 15 வயது சிறுமி
சைக்கிளில் உடல்நலம் பாதித்த தந்தையை அமர வைத்தபடி ஆயிரத்து 200 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஓட்டிச் சென்ற 15 வயது சிறுமிக்கு, இந்திய சைக்கிள் போட்டி கூட்டமைப்பு (Cycling Federation of India) பயிற்சி அளிக்க முன்வந்துள்ளது.
ஹரியானாவின் குருகிராமில் இருந்து சொந்த மாநிலமான பீகாருக்கு சைக்கிளில் உடல்நலம் பாதித்த தந்தையை பின் இருக்கையில் அமர வைத்து சிறுமி ஜோதி குமாரி 8 நாட்களுக்கும் மேலாக ஓட்டிச் சென்றார்.
இதை கண்ட இந்திய சைக்கிள் போட்டி கூட்டமைப்பு தலைவர் ஓன்கர் சிங் (Onkar Singh), சோதனையில் சிறுமி தேர்ச்சி பெற்றால், டெல்லியிலுள்ள தேசிய சைக்கிள் போட்டி அகாடமியில் டிரையினியாக தேர்வு செய்யப்படுவார் என்றார்.
சிறுமியை தொடர்பு கொண்டு, அவரை டெல்லிக்கு அடுத்த மாதம் வரும்படி கோரியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
Comments