15 நாடுகளுக்கு சர்வதேச ஸ்பீட் போஸ்ட் மீண்டும் தொடக்கம்: அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

0 1655
தபால் நிலையங்களில் 15 நாடுகளுக்கு சர்வதேச ஸ்பீட் போஸ்ட் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

தபால் நிலையங்களில் 15 நாடுகளுக்கு சர்வதேச ஸ்பீட் போஸ்ட் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் தபால் நிலையங்களில் சர்வதேச ஸ்பீட் போஸ்ட் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 15 நாடுகளுக்கு சர்வதேச ஸ்பீட் போஸ்ட் சேவை மீண்டும் தொடங்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

அதன் டெலிவரி நேரமானது, விமான சேவைகளை அடிப்படையாக கொண்டிருக்குமென்று கூறியுள்ள ரவிசங்கர் பிரசாத், பிற சர்வதேச பார்சல் சேவை, கடித சேவை தொடர்ந்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments