வங்கி கடன்களுக்கான இஎம்ஐ சலுகை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு

0 11543
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தை பூஜ்யம் புள்ளி நான்கு விழுக்காடு குறைத்து, நான்கு விழுக்காடாக ஆக்கியுள்ளது. கடன்களுக்கான இஎம்ஐ எனப்படும் தவணைகள் திருப்பிச் செலுத்துவதற்கான அவகாசமும் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தை பூஜ்யம் புள்ளி நான்கு விழுக்காடு குறைத்து, நான்கு விழுக்காடாக ஆக்கியுள்ளது. கடன்களுக்கான இஎம்ஐ எனப்படும் தவணைகள் திருப்பிச் செலுத்துவதற்கான அவகாசமும் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் மும்பையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கான வட்டி விகிதம் 4 புள்ளி 4 விழுக்காட்டில் இருந்து, பூஜ்யம் புள்ளி 4 விழுக்காடு குறைக்கப்பட்டு 4 விழுக்காடாக இருக்கும் எனத் தெரிவித்தார்.

அதேபோல் வங்கிகள், ரிசர்வ் வங்கியில் வைத்திருக்கும் பணத்துக்கு வழங்கப்படும் வட்டி விகிதமும் 3 புள்ளி ஏழு ஐந்து விழுக்காட்டில் இருந்து பூஜ்யம் புள்ளி நான்கு விழுக்காடு குறைக்கப்பட்டு 3 புள்ளி மூன்று ஐந்து விழுக்காடாக இருக்கும் எனத் தெரிவித்தார்.

பொதுமக்கள் வங்கிகளிலும், நிதி நிறுவனங்களிலும் பெற்றுள்ள அனைத்து வகையான கடன்களைத் திருப்பிச் செலுத்தவும், இஎம்ஐ எனப்படும் மாதத் தவணைகளைச் செலுத்தவும், ஏற்கெனவே மே 31ந் தேதி வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்ட நிலையில், இப்போது ஆகஸ்டு 31 வரை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் தொழில்துறையினரும் நிறுவனங்களும் பெற்றுள்ள கடன், வொர்க்கிங் கேப்பிடல் ஆகியவற்றுக்கான தவணைகளையும் திருப்பிச் செலுத்துவது ஆகஸ்டு 31 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.

உணவு தானிய விளைச்சல் மூன்று புள்ளி 7 விழுக்காடு அதிகரித்துப் புதிய சாதனை படைத்துள்ளதாகவும் தெரிவித்தார். அந்நியச் செலாவணிக் கையிருப்பு 920 கோடி டாலர் அதிகரித்துள்ளதாகவும், மே 15ஆம் நாள் நிலவரப்படி 48 ஆயிரத்து 700 கோடி அமெரிக்க டாலர் கையிருப்பில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பொருளதார வளர்ச்சி பூஜ்யத்துக்குக் கீழேயே இருக்கும் என்றும், இரண்டாவது அரையாண்டில் வேகமெடுக்கும் என்றும் குறிப்பிட்டார். வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தை பூஜ்யம் புள்ளி நான்கு விழுக்காடு குறைத்துள்ளதால் வீட்டுக்கடன், வாகனக் கடனுக்கான வட்டி குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments