வந்தே பாரத் திட்டத்தின் 15வது நாளில் 23,475 பேர் இந்தியா திரும்பினர்
வந்தே பாரத் திட்டத்தின் கீழ், 47 நாடுகளில் இருந்து 162 விமானங்கள் மூலம் இந்தியர்களை அழைத்து வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அர்ஜண்டினா, தென் ஆப்பிரிக்கா, பெரு, மங்கோலியா உள்ளிட்ட நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை திரும்ப அழைத்து வருவதற்காக விமானங்கள் இயக்கப்படும் என்று வெளியுறவுத்துறை செயலாளர் அனுராக் ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார்.
கடந்த 16ம் தேதி முதல் வந்தே மாதரம் திட்டம் இரண்டாவது கட்டமாக தொடங்கியது. பியூனஸ் ஏரிஸ்-ல் இருந்து ஒரு விமானம் நேற்று 62 இந்திய பயணிகளுடன் ஒரு விமானம் நேற்று வந்து சேர்ந்தது.
இதே போன்று லடாக்கில் இருந்து சுற்றுலாப் பயணிகள் 300 பேரை அழைத்து மற்றொரு விமானம் இந்தியா திரும்பியது.கடந்த 15 நாட்களில் 23 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தாய்நாடு திரும்பியுள்ளனர் என்றும் மேலும் 98 நாடுகளில் இருந்து 26 லட்சம் இந்தியர்கள் தாய்நாடு திரும்ப விண்ணப்பித்துள்ளனர் என்றும் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
Comments