பொதுத்துறை வங்கித் தலைவர்களுடன் நிதியமைச்சர் இன்று ஆலோசனை
பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.
பிரதமர் மோடி 21 லட்சம் கோடி ரூபாய்க்கான கொரோனா நிவாரண நிதித் தொகுப்பை அறிவித்த நிலையில் 5 நாட்களுக்கு அந்த நிதித்தொகுப்பின் விவரங்களை நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். இதில் சிறுதொழில்களுக்கும் விவசாயிகளுக்கும் வங்கிக் கடன்கள் வழங்குவது உள்ளிட்ட முக்கிய அம்சங்களும் இடம் பெற்றன.
பெரும்பாலான திட்டங்கள் வங்கிகள் மூலமாக நேரடியாக பயனாளிகளுக்கு போய் சேருவதால் வங்கிகளின் தலைவர்களுடன் இன்று நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்துகிறார். திட்டங்களை செயல்படுததுவது குறித்து சில முக்கிய முடிவுகள் இக்கூட்டத்தில் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடன்களுக்கான மாதாந்திர தவணைகளை 3 மாதத்திற்கு வங்கிகள் ஒத்தி வைத்துள்ள நிலையில், அதனை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்க பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்துள்ளது.இது தொடர்பாகவும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
Comments