நடுங்க வைக்கும் கொரோனா.. பூமிப்பந்தில் மிரளும் உலக சமூகம்..

0 1695
நடுங்க வைக்கும் கொரோனா.. பூமிப்பந்தில் மிரளும் உலக சமூகம்..

பிரேசிலில், கடந்த 72 மணி நேரத்தில் மட்டும் 50 ஆயிரம் பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். உலக நாடுகளை நடுங்க வைக்கும் கொரோனாவுக்கு, அமெரிக்காவில், உயிரிழப்பு 96 ஆயிரத்தை தாண்டி விட்டது. ரஷியாவில் ஒரே நாளில் 8 ஆயிரத்து 800 க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது.

பூமிப்பந்தில், உலகின் பெரும்பாலான நாடுகளை ஆட்டிப்படைத்து வரும் கொரோனாவால் மக்கள் அச்சத்துடன் வாழும் சூழல் உருவாகி உள்ளது.உச்சபட்சமாக அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 27 ஆயிரத்து 700 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆக, உயிர்ப்பலி 96 ஆயிரத்தை தாண்டி விட்டது.

அடுத்தபடியாக ரஷியாவில், ஒரே நாளில் 8 ஆயிரத்து 849 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆக, அங்கு மேலும் 127 பேர், கொரோனாவுக்கு இரை ஆனார்கள்.பிரேசிலை பொறுத்தவரை, கடந்த 72 நேரத்தில் மட்டும் சுமார் 50 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இங்கிலாந்தில், ஒரே நாளில் 2 ஆயிரத்து 615 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆக, ஈரானில் 2 ஆயிரத்து 392 பேரும், சவதி அரேபியாவில் 2 ஆயிரத்து 532 பேரும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

மெக்சிகோவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 248 பேர், கொரோனாவின் பிடியில் சிக்க, கத்தாரில், ஆயிரத்து 554 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனது.வங்கதேசத்தில் ஒரே நாளில் ஆயிரத்து 773 பேரும், தென் ஆப்பிரிக்காவில் ஆயிரத்து 134 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, துருக்கி, பெரு, கனடா, பெலாரஸ் மற்றும் குவைத் உள்ளிட்ட பல நாடுகளையும், கொரோனா நடு நடுங்க செய்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments