ஜெயலலிதாவின் இல்லமான வேதா நிலையத்தை அரசு வசம் எடுத்துக் கொள்ள அவசரச் சட்டம் பிறப்பிப்பு

0 11370
ஜெயலலிதா வாழ்ந்த இல்லமான வேதா நிலையத்தை அரசு வசம் எடுத்துக் கொள்ளவும், அதை நினைவில்லமாக மாற்றுவதற்கான அறக்கட்டளையை உருவாக்கவும் தமிழக அரசு அவசர சட்டம் இயற்றியுள்ளது.

ஜெயலலிதா வாழ்ந்த இல்லமான வேதா நிலையத்தை அரசு வசம் எடுத்துக் கொள்ளவும், அதை நினைவில்லமாக மாற்றுவதற்கான அறக்கட்டளையை உருவாக்கவும் தமிழக அரசு அவசர சட்டம் இயற்றியுள்ளது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த இல்லமான வேதா நிலையம், அவரது சாதனைகளையும் தியாகத்தையும் நினைவுகூரும் வகையில நினைவு இல்லமாக்கப்படும் என கடந்த 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இதை நிறைவேற்றும் வகையில், சென்னை போயஸ் தோட்டத்தில் சுமார் 10 கிரவுண்டில் அமைந்துள்ள வேதா நிலையத்தை கையகப்படுத்த நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு, அதற்கான நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டன. வேதா நிலையமும், அதில் உள்ள அறைகலன்கள், நூல்கள், அணிமணிகள் உள்ளிட்ட அசையும் பொருட்களும் 3 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் உள்ளன.

கையகப்படுத்தல் நடவடிக்கை முடியும் வரை, வேதா நிலையத்தின் அசையும் மற்றும் அசையா சொத்துகளை நல்ல நிலையில் பாதுகாக்க, அவற்றை அரசு வசம் எடுத்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காகவும், வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கான நீண்ட கால ஏற்பாடுகளை செய்வதற்காக ஜெயலலிதா நினைவு அறக்கட்டளையை உருவாக்கவும் அவசரச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

ஜெயலலிதா நினைவு அறக்கட்டளைக்கு முதலமைச்சர் தலைவராகவும், துணை முதலமைச்சர், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் ஆகியோர் உறுப்பினர்களாகவும், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் உறுப்பினர் செயலராகவும் இருப்பார்கள். வேதா நிலையத்தை பராமரிக்கவும், அங்கு உள்ள பொருட்களை நல்ல நிலையில் பாதுகாத்து பராமரிப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை அறக்கட்டளை மேற்கொள்ளும் என தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments