PM-CARES நிதி தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என பொய்ப்பிரச்சாரம் செய்வதாக காங்.இடைக்கால தலைவர் சோனியா மீது FIR பதிவு
பிரதமரின் கொரோனா அவசரகால நிதியான PM-CARES தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என பொய்ப்பிரச்சாரம் செய்வதாக கூறி காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிதிக்கு கிடைக்கும் நன்கொடைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பதிலாக தனிப்பட்ட உபயோகத்திற்கு பயன்படுத்தப்படுவதாக கடந்த 11 ஆம் தேதி காங்கிரசின் டுவிட்டர் பதிவுகளில் செய்திகள் வெளியாகின.
இது அடிப்படைஆதாரமற்ற குற்றச்சாட்டு என கூறி, கர்நாடக மாநிலம் சிவமோகா மாவட்ட பாஜகவை சேர்ந்த பிரவீண் என்ற வழக்கறிஞர் அளித்த புகாரின் பேரில் சோனியா காந்தியின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் டுவிட்டர் கணக்குகளை நிர்வகிக்கும் அதிகாரப்பூர்வ நபர் என்ற அடிப்படையில் சோனியா மீது வழக்கு பதிவானதாக கூறப்படுகிறது.
If the PM CARES fund is not being used for transport of migrants, repatriation of Indians from abroad or providing a financial stimulus, what is it being used for?#PMCareFraud pic.twitter.com/ZPrMdEyWbB
— Congress (@INCIndia) May 11, 2020
Comments