போலி சித்த வைத்தியர் தணிகாசலம் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை
கொரோனா பாதிப்பைக் குணப்படுத்த மருந்து இருப்பதாகக் கூறியதால் கைது செய்யப்பட்ட திருத்தணிகாசலத்தைக் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யச் சென்னை மாநகரக் காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா பாதிப்பைக் குணப்படுத்தும் மருந்து தன்னிடம் இருப்பதாகச் சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்திய திருத்தணிகாசலம் சென்னை மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினரால் கடந்த ஆறாம் தேதி கைது செய்யப்பட்டார்.
அடுக்கடுக்கான புகார்களை அடுத்து, ஓராண்டுக்குப் பிணையில் வெளி வர முடியாத வகையில் அவரைக் குண்டர் தடுப்புச் சட்டத்தில் காவலில் வைக்கச் சென்னை மாநகரக் காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Comments