சீன நிறுவனங்களை நீக்குவதற்கான மசோதா-அமெரிக்க செனட் சபையில் ஒருமனதாக நிறைவேறியது

0 2596

அமெரிக்க பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள அலிபாபா, பைடு உள்ளிட்ட சீன நிறுவனங்களை நீக்குவதற்கான மசோதாவை, அமெரிக்க செனட் சபை ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது.

அமெரிக்காவின் கணக்குப் பதிவியல் சட்டங்களை பின்பற்றாத சீன நிறுவனங்களை நீக்குவதற்கான இந்த மசோதாவின்படி, அமெரிக்க பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள், அந்நிய அரசுகளின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதையும் நிரூபிக்க வேண்டும்.

லக்கின் காஃபி என்ற சீன நிறுவனம், 310 மில்லியன் டாலர்கள் அளவுக்கு பொய் கணக்கு காட்டியதால், நாஸ்டாக் பங்குச்சந்தையில் இருந்து நீக்கப்படுவதாக நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நடவடிக்கையல் சீனாவைச் சேர்ந்த பெருநிறுவனமான அலிபாபாவின் பங்குகள் 2 சதவீதத்திற்கும் அதிகமாக சரிவைச் சந்தித்தன. இந்த சட்டம், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்கள் அமெரிக்க பங்குச்சந்தைகளை ஏமாற்றுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் என செனட் உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments