அம்பன் புயலால் மேற்கு வங்க மாநிலத்தில் பலியோனார் எண்ணிக்கை 72 ஆக உயர்வு

0 3904
அம்பன் புயலால் ஒடிசா, மேற்குவங்க மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேற்கு வங்கத்தில் மட்டும் புயல் தொடர்பான விபத்துகளில் சிக்கி 72 பேர் உயிரிழந்திருப்பதாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். புயல் பாதிப்புகளை நேரில் பார்வையிடவும் பிரதமர் மோடிக்கு மம்தா அழைப்பு விடுத்துள்ளார்.

அம்பன் புயலால் ஒடிசா, மேற்குவங்க மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேற்கு வங்கத்தில் மட்டும் புயல் தொடர்பான விபத்துகளில் சிக்கி 72 பேர் உயிரிழந்திருப்பதாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். புயல் பாதிப்புகளை நேரில் பார்வையிடவும் பிரதமர் மோடிக்கு மம்தா அழைப்பு விடுத்துள்ளார்.

வங்கக் கடலில் உருவான அம்பன் புயல் மேற்குவங்க மாநிலம் சுந்தர்பன் அருகே புதன்கிழமை மாலை கரையைக் கடந்தது. 30 கிலோ மீட்டர் விட்டமுள்ள கண்பகுதியை கொண்ட புயல், சுமார் 6 மணி நேரத்துக்கும் மேலாக கரையைக் கடந்த நிலையில் மணிக்கு 185 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசியது. மேலும் கடலில் 15 அடி உயர ராட்சத அலைகள் எழுந்தன. கூடவே கனமழையும் கொட்டி தீர்த்ததால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இதனால் பல்லாயிரக்கணக்கான மரங்கள் வேருடன் சாய்ந்த நிலையில், ஏராளமான மின்கம்பங்களும் முறிந்து விழுந்தன. மேலும் ஆயிரக்கணக்கான வீடுகளும் முற்றிலும் சேதமடைந்தன. ஹௌரா அருகே பள்ளிக்கட்டிடம் ஒன்றின் மேற்கூரை காற்றில் பெயர்ந்து விழுந்தது.

தெற்கு கொல்கத்தாவிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள், காற்றின் வேகத்தில் ஒன்றின் மீது ஒன்று மோதிக் கொண்டன.

மேற்கு வங்க மாநிலத்தில் 5 லட்சம் பேரும், ஒடிசாவில் ஒரு லட்சம் பேரும் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சாலைகளில் விழுந்து கிடக்கும் மரங்கள், மின்கம்பங்கள், அறுந்து கிடக்கும் மின்கம்பிகளை அகற்றும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே கொரோனாவை விட அம்பன் புயல் பேரழிவை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, சேதமதிப்பு ஒரு லட்சம் கோடியை தாண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் புயல் தொடர்பான விபத்துகளில் சிக்கி மேற்கு வங்கத்தில் சுமார் 72 பேர் உயிரிழந்திருப்பதாகவும், அவர்களது குடும்பத்தினருக்கு தலா 2.5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

இதனிடையே புயல் தொடர்பான விவரங்களை நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் துல்லியமாக கணித்ததால், பாதிப்பு பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments