கிருமி நாசினிகளுக்கு மாற்றாக களமிறக்கப்பட்டுள்ள ரோபோ
புற ஊதாக் கதிர்களால், கொரோனா வைரஸை அழிக்கும் புதிய ரோபோக்கள், சிங்கப்பூரில் உள்ள பேரங்காடிகளில் வலம் வருகின்றன.
கிருமி நாசினிகளுக்கு மாற்றாக களமிறக்கப்பட்டுள்ள இந்த ரோபோக்கள், புற ஊதாக் கதிர்களை வெளியிட்டு, பொருட்கள் மீது மட்டுமின்றி, காற்றில் கலந்துள்ள கொரோனா கிருமிகளையும் கொல்லும் ஆற்றல் வாய்ந்தவை என்று கூறப்படுகிறது.
புற ஊதாக் கதிர் வீச்சால், கண்கள் மற்றும் தோலில் ஒவ்வாமை ஏற்படக்கூடும் என்பதால், பெரும்பாலும் இரவு நேரங்களில் இந்த ரோபோக்கள் இயக்கப் படுகின்றன. மேலும், மனித நடமாட்டம் தென்பட்டால், கதிர் வீச்சு வெளியிடுவதை நிறுத்தும் வண்ணம் இந்த ரோபோக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
Comments