அம்பன் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் துயர் துடைக்க நாடு ஒற்றுமையுடன் நிற்கும் -பிரதமர் மோடி
அம்பன் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் துயர் துடைக்க நாடு ஒற்றுமையுடன் நிற்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் பதிவு ஒன்றில் இதைத் தெரிவித்துள்ள அவர்,பாதிப்புக்கு ஆளாகி உள்ள ஒடிசா மற்றும் மேற்கு வங்க மக்களின் நிலைமை குறித்து தாம் கவலைப்படுவதாக தெரிவித்துள்ளார்.
ஒடிசா மக்கள் புயல் பாதிப்பை தீரத்துடன் எதிர்கொண்டு வருவதாகவும், அதிகாரிகள் அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளை செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேற்கு வங்கத்தில் இருந்து வரும் காட்சிகளை பார்க்கும் போது, இது சவாலான தருணம் என்பதை தாம் உணர்வதாக குறிப்பிட்டுள்ள மோடி, இயல்பு நிலைக்கு திரும்ப மத்திய அரசின் அனைத்து உதவிகளும் வழங்கப்படும் எனவும் உறுதி அளித்துள்ளார்.
Comments