நாகர்கோவில் காசிக்கு எதிராக 2-வது முறையாக 17 வயது மாணவி புகாரில் போக்சோ வழக்கு

0 19865
பெண் மருத்துவர் உள்ளிட்ட பெண்களை ஆபாசப் படம் எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள நாகர்கோவில் காசி 17 வயது கல்லூரி மாணவியின் புகாரில் 2-வது முறையாக போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டு வருகிறான்.

இந்த வழக்கில் அவனை போக்சோ வழக்கில் கைது செய்த கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல்துறையினர், அவனை காவலில் விசாரிக்க அனுமதி கோரி அளித்த மனுவை அடுத்து 6 நாள் காவலில் விசாரிக்க நாகர்கோவில் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

காசியை போலீசார் சென்னை, பெங்களூர், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

காசிக்கு ஏற்கனவே ஒரு வழக்கில் 3 நாள் போலீஸ் காவல் வழங்கப்பட்ட நிலையில் தற்போது 2-வது முறையாக போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments