முன்பதிவு தொடங்கிய 2 மணி நேரத்தில் 4 லட்சம் டிக்கெட்டுகள் பதிவு - மத்திய ரயில்வே துறை
ஜூன் 1ம் தேதி முதல் இயக்கப்படும் ரயில்களுக்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கிய 2 மணி நேரத்திலேயே, 4 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
1ம் தேதி இயக்கப்படும் 73 பயணிகள் ரயிலுக்கான 1 லட்சத்து 49 ஆயிரம் டிக்கெட்டுகளுக்கு, 2 லட்சத்து 90 ஆயிரம் பேர் முன்பதிவு செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது IRCTC இணையதளம் மற்றும் செல்போன் செயலி மூலம் மட்டுமே முன்பதிவு நடைபெற்று வரும் நிலையில், நாடு முழுவதும் 1.7 லட்சம் பொது சேவை மையங்கள் மற்றும் பல்வேறு ரயில் நிலையங்களிலுள்ள கவுண்டர்களிலும் முன்பதிவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
அடுத்த மாதம் 1ம் தேதி முதல் 200 ரயில்கள் இயக்கப்படும் என அறிவித்த ரயில்வே அமைச்சகம் அட்டவணையையும் வெளியிட்ட நிலையில், அதற்கான முன்பதிவு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.
Comments