மதுரவாயல், நெற்குன்றம் பகுதிகளில் அதிக கொரோனா பாதிப்பு ஏன்?
சென்னை கோயம்பேடு சந்தை மூலம் மதுரவாயல், நெற்குன்றம் பகுதிகளில் ஏற்பட்ட அதிக கொரோனா பாதிப்பு தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வளசரவாக்கம் மண்டலத்தில் மட்டும் இதுவரை 570 பேர் கொரோனா நோய்த்தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். போரூர், மதுரவாயல், நெற்குன்றம் பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்க கோயம்பேடு தொடர்புகள் தான் காரணம் என்று வளசரவாக்கம் மண்டல அலுவலர் சசிகலா கூறியுள்ளார்.
கோயம்பேடு சந்தை இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் தற்போது மதுரவாயல், நெற்குன்றனத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். வளசரவாக்கத்தில் இதுவரை 223 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றும், தனிநபர் இடைவெளியை கடைபிடிக்காத கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்றும், அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியே செல்லுபவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
Comments