வட தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

0 2396
வட தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும்

அம்பன் புயல் கரையைக் கடந்துள்ள நிலையில், வட தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், புயல் கரையை கடந்ததால் காற்றின் திசையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், தமிழகத்திற்கு மேற்கு - வட மேற்கு திசையிலிருந்து காற்று வீசுவதால் அனல் காற்றும் வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற்பகலில் கடலோர மாவட்டங்களில் கிழக்கு - தென்கிழக்கு திசையிலிருந்து காற்று வீசக்கூடும் என்பதால், அதிலுள்ள அதிகளவிலான ஈரப்பதத்தினால் புழுக்கம் ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு இந்த நிலை நீடித்தாலும், அதன்பின்னர் மழையை எதிர்பார்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments