10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்கள் 3 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது - பள்ளி கல்வித்துறை அமைச்சர்
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஆயத்தப்பணிகள் நடைபெற்று வருவதாகவும், மாணவர்களுக்கு எளிமையான வழிகாட்டுதலுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
Comments